நெல்லை டிச, 14
நெல்லை மாவட்டம் அம்பை பாரத் ஸ்டேட் வங்கி எதிரில்
அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் மின் கட்டணம், பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் நாளுக்கு நாள் உயரும் விலைவாசி உள்ளிட்டவற்றை கண்டித்து அம்பை சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பு செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள், வீட்டு வரி கட்டுவதற்கு வாடகை வீட்டிலேயே வசிக்கலாம் என்றனர், தொடர்ந்து சட்ட மன்ற உறுப்பினர் பேசுகையில், இது அ.தி.மு.க வின் ஆர்ப்பாட்டம் கிடையாது, மக்களின் ஆர்ப்பாட்டம் என்றார்.
மேலும் மின் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, சொத்துவரி உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்டவற்றை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள், பெண்கள் உள்பட சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஜான் பீட்டர்.
செய்தியாளர்.
நெல்லை மாவட்டம்.