புதுடெல்லி டிச, 13
தேசிய அளவிலான நதிநீர் இணைப்பு ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தமிழகம் சார்பில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்கிறார். மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தென் மாநிலங்களின் தண்ணீர் பிரச்சனைக்கு நீண்ட கால அடிப்படையில் நிரந்தர தீர்வு காணும் வகையில் ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளது.