உத்திரபிரதேசம் டிச, 12
உத்திரபிரதேச பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்கும் வகையில் அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிப்பது என அரசு முடிவு செய்துள்ளது. இந்த கட்டாய பயிற்சியானது அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை அனைத்து மாணவிகளுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியின்போது தலைமை ஆசிரியர் கண்காணிப்பில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.