சென்னை டிச, 12
அனைத்து மக்களுக்கும் தரமான இலவச மருத்துவ சேவை வழங்கப்படுவதை நோக்கமாகக் கொண்டு ஆண்டுதோறும் டிசம்பர் 12ம் தேதி அனைவருக்கும் நல் வாழ்வு திட்ட தினம் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைவருக்கும் நல் வாழ்வு மையங்களில் கடந்த அக்டோபர் 12 முதல் டிசம்பர் 8 வரை நாட்டிலேயே அதிக அளவில் 22.59 லட்சம் பேருக்கு தொலைத்தொடர்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.