சென்னை டிச, 13
இந்தியாவில் நவம்பர் மாதத்திற்கான நுகர்வோர் பணவீக்கம் 5.88 சதவீதமாக குறைந்துள்ளது அக்டோபர் மாதத்தில் இது 6.77 சதவீதமாகவும், செப்டம்பரில் இது 7.41 சதவீதமாகவும் இருந்தது. உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை வேகமாக சரிந்து வருவதால் பணவீக்கம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தினை உயர்த்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
