சென்னை டிச, 12
அமைச்சரான பிறகும் மாதம் தோறும் சபரிமலைக்கு சென்ற ஐயப்பன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம் செய்து வருகிறார். தன் நினைவு தெரிந்த நாள் முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருகிறேன் தவறாமல் மாதாந்திர பூஜைக்கும் சென்று வழிபடுகிறேன் அமைச்சரான பிறகு அதிக அளவில் பணிகள் இருந்தாலும் சபரிமலைக்கு செல்வதை நிறுத்தவில்லை என அவர் கூறியுள்ளார். மேலும் அவர் தமிழகத்தில் 48 முதுநிலை ஆலயங்களில் செல்போன் தடை விரைவில் அமல்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.
மேலும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து இது முதல் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமல்படுத்தப்படும். அதன் பின் அனைத்து கோவில்களிலும் இது கொண்டுவரப்படும் என தெரிவித்தார். கோவில்களில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.