சென்னை டிச, 12
மாண்டேஸ் புயல் கரையை கடந்தாலும் மூன்று நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று அதிகாலை சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதே போல் செங்கல்பட்டு காஞ்சிபுரம், தென்காசி திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கன மழை பெய்தது. மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் இன்று திங்கள்கிழமை பணிக்கு செல்வோர் சற்று சிரமத்திற்கு ஆளாகினர்.