திருமலை டிச, 11
திருப்பதி ஏழுமலையானை வழிபட ரூபாய் 300 தரிசன டிக்கெட் களை தேவஸ்தான நிர்வாகம் வெளியிடுகிறது. டிசம்பர் 16 மற்றும் 31ம் தேதிகளில் காலை 9 மணிக்கு இணையதளத்தில் டிக்கெட் வெளியிடப்பட உள்ளது. இதனால் பக்தர்கள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலையில் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி செல்ல நினைக்கும் பக்தர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறலாம்.