புதுடெல்லி டிச, 11
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் உடன் ஆதார் விபரங்களை 56 கோடி பேர் இணைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் போலியான விபரங்களை நீக்குவதற்காக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விபரங்களை இணைப்பதற்கு 6பி என்ற படிவம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் பெறப்பட்டு வருகின்றன. அதன்படி 95 கோடி வாக்காளர்களில் இதுவரை 56 கோடி பேர் தங்கள் ஆதாரை இணைத்துள்ளனர்.