சென்னை டிச, 11
தமிழகத்தில் கடந்த ஆண்டு விட 15 % குற்றங்கள் குறைந்துள்ளதாக காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த வருடத்தில் அக்டோபர் மாதம் 1,597 கொலை குற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இந்த ஆண்டு 1,368 கொலை குற்றங்கள் நடந்த நிலையில் 15 சதவீதம் கொலை குற்றங்கள் குறைந்துள்ளன. அதேபோன்று ஆதாய கொலைகள் 89 லிருந்து 79 ஆக குறைந்துள்ளது என தகவல் தெரிவித்தார்.