சத்தீஸ்கர் டிச, 11
நாகபுரி-பிலாஸ்பூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். நாகபுரி சீரடி இடையேயான முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவையையும் அவர் தொடங்கி வைக்கிறார். மேலும் நாகபுரியில் அமையப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதுவரை ஐந்து வந்தே பாரத் ரயில் திட்டம் உள்ள நிலையில், இது ஆறாவது திட்டமாகும். அடுத்த ஆண்டு சுதந்திர தினத்திற்குள் 75 ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.