பழனி ஆகஸ்ட், 9
சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களுக்கு அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக அனைத்து தபால் அலுவலகங்களிலும் தேசியக்கொடி விற்பனை தொடங்கியுள்ளது.
இந்தநிலையில் தபால்துறை சார்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, பழனியில், தலைமை தபால் அலுவலர் திருமலைச்சாமி தலைமையில் அலுவலக பணியாளர்கள், ஊழியர்கள் இன்று விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். தபால் அலுவலகத்தில் இருந்து புதுதாராபுரம் சாலை, வேல் ரவுண்டானா, திண்டுக்கல் சாலை, பஸ்நிலையம் வழியாக ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர்கள் தேசியக்கொடி ஏந்தியபடி சென்றனர்