நெல்லை டிச, 10
நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்கின்றனர். பொது மக்களும் அதிகமானோர் பூக்களை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக வரத்து குறைவின் போதும், சுபமுகூர்த்த நாட்கள், பண்டிகை நாட்களின் போதும் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும்.
இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் (12 ம்தேதி) என தொடர்ந்து 2 நாட்கள் சுபமுகூர்த்த தினங்கள் வருகிறது. இதையொட்டி இன்று பூக்களின் விலை மிகவும் அதிகரித்து காணப்பட்டது. நெல்லையில் நேற்று 1 கிலோ மல்லிகை பூ ரூ.3 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. இன்று ஒரேநாளில் ரூ.1,500 உயர்ந்து பிற்பகலில் 4,500-க்கு விற்கப்பட்டது. எனினும் தேவை அதிகம் காரணமாக ஏராளமானோர் போட்டி போட்டு பூக்களை வாங்கி சென்றனர். இதைத்தொடர்ந்து மார்க்கெட் உள்ளிட்ட சில இடங்களில் மல்லிகை பூ கிலோ ரூ.5 ஆயிரம் வரை விற்கப்பட்டது.
ஜான் பீட்டர்.
செய்தியாளர்.
நெல்லை மாவட்டம்.