சென்னை டிச, 10
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன பொதுச் செயலாளராக இருந்த அருணாச்சலம் அண்மையில் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக திகழ்ந்த அவர் பாஜகவில் இணைந்தது அரசியல் கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அருணாச்சலம் மீண்டும் கமலஹாசன் முன்னிலையில் மக்கள் நீதிமய்யம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.