குஜராத் டிச, 9
குஜராத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 156 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதற்கு அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், வரலாறு காணாத அளவுக்கு வெற்றியைப் பெற்றதற்கு பிரதமர் மோடி அமித்ஷா மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர் நட்டா ஆகியோருக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளா.ர் மாநிலத்தில் நல்லாட்சிக்கு கிடைத்ததே வரலாறு காணாத அளவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி எனவும் கூறியுள்ளார்.