திருவாரூர் டிச, 10
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரடாச்சேரி ஒன்றியம், இலையூர் ஊராட்சி, அடவங்குடியில் ரூ.14.65 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது விநியோக திட்ட கட்டிடம், கொரடாச்சேரி ஒன்றியம், கரையாபாலையூர் ஊராட்சி, கட்டளையில் ரூ.14.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொது விநியோக திட்ட கட்டிடம் ஆகியவைகளை பூண்டி சட்ட மன்ற உறுப்பினர் கலைவாணன் திறந்து வைத்தார்.
இவ்விழாவில் கூட்டுறவு இணைப்பதிவாளர் சித்ரா, மாவட்ட ஊராட்சி துணை தலைவர்சேகர் கலியபெருமாள், கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஸ்வநாதன், கொரடாச்சேரி பேரூர் தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவேந்தன், ஊராட்சி தலைவர்கள் இலையூர் காமராஜ், கரையாபாலையூர் மீனா கல்யாணசுந்தரம் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.