ஈரோடு டிச, 10
தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் கொண்டு வந்துள்ள அன்னூர், பவானிசாகர், வாரப்பட்டி தொழிற் பேட்டை திட்டங்களை ரத்து செய்ய கோரி பவானி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சென்னிமலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகள், விவசாய சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். திட்டத்தை ரத்து செய்ய அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வரும் 30 ம்தேதி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்கும் இயக்கத்தை முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டது.