Spread the love

நெல்லை டிச, 10

நெல்லை மாவட்டத்தில் வறட்சி பகுதியான ராதா புரம் தாலுகா பகுதிகளில் வேலிகள் மற்றும் சாலை யோர பகுதி களில் பல்வேறு காட்டுச் செடிகள் இயற்கையாகவே வளர்வதுண்டு.

இவற்றில் ஒரு சில செடி வகைகள் அருகிலுள்ள மரங்களை பாதுகாப்பாக பற்றிக் கொண்டு வளர்கின்றன. ஆண்டுக்கு ஒரு முறை கார்த்திகை மாதத்தில் மட்டுமே பூக்கும் செங்காந்தாள் மலர்கள் கார்த்திகை பூ என்று அழைக்கப்படுவதுடன், தமிழக மாநில மலர் என போற்றப்படுகிறது.
இப்பூக்கள் புற்றுநோய்க்கு மருந்தாக இருப்பது முக்கியத்துவமாகும். அரியவகை மூலிகை செடியாகவும் கருதப்படுகிறது.

தற்போது ராதாபுரம் தாலுகா பகுதிகளில் பணகுடி, கூடங்குளம், வடக்கன்குளம், பழவூர், சமூகரெங்கபுரம், பணகுடி உட்பட பல்வேறு கிராமப்புற சாலைகளில் செங்காந்தாள் மலர்கள் பூத்துள்ளன.
ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் இந்த மலர்களை அரசு தொடர் நடவடிக்கையின் வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது பல்வேறு சமூக அமைப்பு களின் வேண்டுகோளாக இருக்கிறது.

ஜான் பீட்டர்.
செய்தியாளர்.
நெல்லை மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *