நெல்லை டிச, 9
அதிமுக சார்பில் தமிழகத்தில் மின் கட்டணம், பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தமிழகத்தில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவது உள்ளிட்டவற்றை கண்டித்து தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற இருப்பதாக அறிவித்தது.
அதன்படி நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு கல்லிடை நகர செயலாளர் கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அப்போது மின் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, சொத்துவரி உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்டவற்றை கண்டித்து பதாகைகள் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டங்களில் முன்னாள் நகர செயலாளர் சங்கரநாராயணன், தலைமை கழக பேச்சாளர் மின்னல் மீனாட்சி, தலைமை செயற்குழு உறுப்பினர் பார்வதி பாக்கியம், அம்பை நகர செயலாளர் அறிவழகன், விகேபுரம் நகர செயலாளர் கண்ணன், வீரவநல்லூர் நகர செயலாளர் முருகேசன், எம் ஜி ஆர் மன்ற தலைவர் முத்தையா, வட்டாரதலைவர்கள் முத்தையா, தங்கவேல், கவுன்சிலர்கள் முத்துக்குமார், மீனாட்சி, உமா மகேஸ்வரி, அசோகன்,முருகன், மற்றும் பெண்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஜான் பீட்டர்.
செய்தியாளர்.
நெல்லை மாவட்டம்.