தருமபுரி டிச, 10
மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நவலை ஊராட்சி நவலை கிராமத்தில் பச்சையப்பன் வீடு முதல் கிருஷ்ணகுமார் வீடு வரை ரூ. 1.93 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சிமெண்ட் சாலை அமைத்தல் பணி மற்றும் ரூபாய் 1.78 லட்சம் மதிப்பில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மா மரங்களுக்கு மண் அணைக்கும் பணி ஆகியவற்றை ஆட்சியர் சாந்தி பார்வையிட்டார். மேலும் கொங்கு நகர் பகுதியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.1.73 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் குடிநீர் இணைப்பு திட்ட பணிகள் ஆகிய பணிகளை நேரில் தருமபுரி மாவட்ட ஆட்சி தலைவர் சாந்தி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி மரியம் ரெஜினா, மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், உதவி பொறி யாளர்கள் அன்பழகன், பழனியம்மாள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் இன்பசேகர், சுகந்தி, முரளிதரன், கொசப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாலு, துணைத்தலைவர் திருமால், ஊராட்சி செயலாளர் இளையரசு மற்றும் பலர் உடன் இருந்தனர்.