சென்னை டிச, 9
தீவிரப் புயலாக நிலவி வந்த மாண்டஸ் தற்போது வலுவிழந்தது. சென்னையிலிருந்து 260 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்த புயல் தற்போது 12 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் மட்டும் நகர்ந்து வருகிறது. இந்த புயல் மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவில் இருந்து நாளை அதிகாலைக்குள் கரையை கடக்க கூடும் என வானிலை எச்சரிக்கை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
