சென்னை டிச, 9
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளை ஒட்டி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் யுபிஏ தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அவருக்கு மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள் என முதலமைச்சர் பதவிட்டுள்ளார்.