சென்னை டிச, 9
இசை உலகில் தனக்கென தனிப்பட்டளத்தை வைத்திருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவர் ஜனவரி மாதம் மலேசியாவில் பிரம்மாண்ட இசை கச்சேரியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது தனது இசைக் குழுவினருடன் அங்கு இசை நிகழ்ச்சி நடத்துகிறார் இதற்கான டிக்கெட் இப்போதே விற்று தீர்ந்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது. திரையரங்குகளில் வெற்றி நடை போடும் லவ் டுடே படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.