கேரளா டிச, 9
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக 5 புதிய திட்டங்களுக்கு கேரளா அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சபரிமலை சன்னிதானத்தில் 15 கோடி மதிப்பில் அப்பம் மற்றும் மாவு ஆலை அமைக்கப்பட உள்ளது. தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க குன்னூர் அணையிலிருந்து குழாய் பதிக்கும் திட்டம், பம்பா நதி கோரிக்கை, புதிய பாலம், நிலக்கல் அடிவாரத்தில் 8 கோடி மதிப்பில் புதிய பாதுகாப்பு வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.