புதுடெல்லி டிச, 8
வெளிநாட்டு சூதாட்ட நிறுவனங்களின் விளம்பரங்களை திருத்த வேண்டும் என கூகுள் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அக்டோபர் 3 ம் தேதி நடந்த ஆலோசனைக்குப் பிறகு, டிவி சேனல்கள், ஓடிடி பிளேயர்கள் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வெளிநாட்டு பந்தய விளம்பரங்களை காட்டுவதை நிறுத்தினர். ஆனால் youtube, google இது போன்ற விளம்பரங்களை காட்டுகிறது இதனை உடனடியாக நிறுத்துமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.