புதுடெல்லி டிச, 8
போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 36-வது இடம் பிடித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக இவர் இந்த பட்டியலில் இடம் பிடித்து வருகிறார். முதல் இடத்தில் யூரோப்பியன் கமிஷன் பிரசிடெண்ட் உர்சிலா வான்டெர் லியோன் உள்ளார். மேலும் இந்த பட்டியலில் எச்.சி.எல் தலைவர் ரோஷினி நாடார், செபி தலைவர் மாதாபி புரி உள்ளிட்ட ஐந்து பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.