அரியலூர் டிச, 8
அரியலூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் அட்டைதாரர்களுக்கு மட்டும் பால் தருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சில்லறை விற்பனையில் விநியோகிக்க கோரி பால் வாங்க வந்த பொதுமக்கள் ஆவின் பால் லாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொய்யாத நல்லூர், தடுகூர், விதைக்காட்டிலும் சில்லறை விற்பனையில் பால் தரப்படாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.