அரியலூர் டிச, 6
அரியலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக பனிப் பொழிவு அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை தூறலுடன் ஆரம்பித்த மழை அதன் பிறகு சாரல் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் மழை நீர் தேங்கியது. எதிர்பாராத விதமாக பெய்த மழையால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடைந்தனர்.