திருப்பூர் டிச, 7
சங்கரமநல்லூா் பேரூராட்சியில் தமிழ்நாடு ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் புதிய சுயஉதவிக்குழுக்கள் அமைத்தல், சுழல்நிதி வழங்குதல் மற்றும் வங்கிக்கடன் இணைப்பு வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் 32 புதிய சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு 11 சுயஉதவிக் குழுக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் சுழல்நிதி வழங்கியதுடன், 15 சுயஉதவிக் குழுக்களுக்கு நேரடி வங்கிக் கடனாக ரூ.64.70 லட்சத்தை மாவட்ட ஆட்சியர் வினீத், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் சண்முகசுந்தரம் ஆகியோா் வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் லட்சுமணன், திட்ட இயக்குநா் மதுமிதா, மாவட்ட முன்னோடி வழங்கி மேலாளா் அலெக்ஸாண்டா் மற்றும் மகளிா் சுயஉதவிக் குழுவினா் பங்கேற்றனா்.