திருப்பூர் டிச, 5
திருப்பூர் மாவட்டத்தில் இன்று செய்தித்துறை அமைச்சர் .மு.பெ.சாமிநாதன்,சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்,ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி.என்.கயல்விழிசெல்வராஜ் ஆகியோர் தலைமையில் சிறுபான்மையினர் நலன்மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்தஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின்சார்பில் 55 பயனாளிகளுக்கு ரூ.18.19 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டஉதவிகளை அமைச்சர் பெருமக்கள் வழங்கினார்கள்.செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்செஞ்சி கே.எஸ்.மஸ்தான், ஆதிதிராவிடர் நலத்துறைஅமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலைமையில்இன்று (05.12.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் எஸ்.வினீத் இ.ஆ.ப., முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சிறுபான்மையினர்நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்தஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 55 பயனாளிகளுக்கு ரூ.18.19 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெருமக்கள் வழங்கினார்.
மேலும் அந்த வகையில், சிறுபான்மையினருக்குபயனாளிகளுக்கு ரூ.92,400 மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்களையும்,ரூ.42,736 தேய்ப்பு 8 பயனாளிகளுக்கு மதிப்பீட்டில் விலையில்லா பெட்டிகளையும்,10 பயனாளிகளுக்கு ரூ.51,750 மதிப்பீட்டில் உலமாக்கள் மற்றும்இதர பணியாளர்கள் நல வாரிய பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு விலையில்லாமிதிவண்டிகளையும், 1 பயனாளிக்கு ரூ.25,000 மதிப்பீட்டில் வக்பு வாரியங்களில்பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர மானியத்தொகையும், என 34 பயனாளிகளுக்கு ரூ.2,11,886 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும்,
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9,54,000 மதிப்பில் பேட்டரிவீல்சேர்களையும், 5 பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்குரூ.67,745 மதிப்பீட்டில் கெப்பேசிகளையும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் இணைமானிய கூறூரின் கீழ் 7 பயனாளிகளுக்கு தொழில் துவங்க 30% மானியத்துடன்ரூ.5,86,244 மதிப்பீட்டில் கடனுதவிகளும் என மொத்தம் 55 பயனாளிகளுக்குரூ.18,19,855 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சிறுபான்மையினர் நலன்மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சிகே.எஸ். மஸ்தான் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறைஅமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினார்கள்.
முன்னதாக, அவிநாசி வட்டம், சந்தைப்பேட்டையில் அமைந்துள்ள இலங்கைதமிழர் மறுவாழ்வு முகாமில் ஆய்வு மேற்கொண்டு கோரிக்கை மனுக்களைசிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் பெற்றுக்கொண்டார்கள்.அதனைத் தொடர்ந்து, செய்தித்துறை அமைச்சர், சிறுபான்மையினர் நலன் மற்றும்வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் உலக மண் தினத்தினை முன்னிட்டு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வுகுறும்படத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.மேலும், பல்லடம் ரோடு ஹஜ்ரத் காதர் மஸ்தான் வலியுல்லாஹ் தர்கா ஷரீப் சுன்னத் ஜமாத் பள்ளிவாசலை ஆய்வு மேற்கொண்டு பல்லடம் ஊராட்சிஒன்றியம், பருவாய் ஊராட்சியிலுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமினைஅமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆய்வு மெற்கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில் போது, திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாரயணன இ.ஆ.ப., கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சொ.சீனிவாசன்,மாவட்ட ஆதிதிரவிடர் நலத்துறை அலுவலர் ரவிச்சந்திரன், திருப்பூர்மாநகராட்சி 4-ம் மண்டலக்குழுத்தலைவர் இல.பத்மநாபன் மற்றும்தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.