திருப்பூர் டிச, 7
வேளாண் துறை சார்பில் வீடு தேடி வரும் 20 நடமாடும் காய் கனி அங்காடித் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக கோவை, திருச்சி, செங்கல்பட்டு, திருப்பூர், சேலம் மாவட்டங்களில் இது கொண்டுவரப்பட்டுள்ளது இதன் மூலம் பொதுமக்கள் வீட்டில் இருந்தே காய் உள்ளிட்ட தேவையான பொருட்களை இந்த நடமாடும் காய் கனி அங்காடியில் வாங்கிக் கொள்ளலாம். விரைவில் இது தமிழகம் முழுவதும் கொண்டுவரப்பட உள்ளது.