தேனி டிச, 7
தேனி அருகே வீரபாண்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் தடுப்பு குறித்து சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வீரபாண்டி பேரூராட்சி சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில் வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி பங்கேற்று பள்ளி மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். மேலும் பள்ளி மாணவர்கள் கல்வி, விளையாட்டு, பண்பாடு, ஒழுக்கங்களில் சிறந்து விளங்க வேண்டும் என்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றியும் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார் .
மேலும் இந்த நிகழ்ச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ,வீரபாண்டி அரசு மருத்துவமனை சுகாதாரத்துறை அலுவலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.