சிவகங்கை டிச, 7
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது. இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திற னாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.
இதில் ராஜபாளையம் ரிதம் அறிவுசார் குறை பாடுடையோர்க்கான சிறப்பு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, சென்னையில் நடந்த மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர் முனியசாமி 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும், மாணவி ஜீவிதா நீளம் தாண்டுதல் போட்டியிலும், மாணவி அமலா கிரிக்கெட் பந்து எறிதல் போட்டியிலும் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். அவர்கள் பெற்ற சான்றிதழ் மற்றும் கேடயத்தை ஆட்சியரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.