Spread the love

தேவகோட்டை டிச,3

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் உபயோகிப்பவர்களின் கணக்கு எடுப்பாளராக பணிபுரிபவர் கண்ணன். இவர் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி தேவகோட்டை அருகே உள்ள பனிப்பிலான்வயல் கிராமத்திற்கு மின் கணக்கு எடுப்பதற்காக சென்றபோது ராசு என்பவரின் கடை பூட்டப்பட்டிருந்தது. அருகில் இருந்தவர்களிடம் இந்த கடை உரிமையாளர் யார் என கேட்டுள்ளார். அருகே நின்றவர்கள் இவர்தான் கடை உரிமையாளர் என ராசி என்பவரை அடையாளம் காட்டியுள்ளனர். இதையடுத்து கண்ணன், ராசுவிடம் கடையை திறங்கள் கணக்கெடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த ராசு, கண்ணனை தாக்கினாராம். இது குறித்த புகாரின்பேரில் ஆராவயல் போலீசார் தேவகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஆர்.எம். மாரிமுத்து குற்றம் சாட்டப்பட்ட ராசுவுக்கு 5 ஆண்டுகள் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *