சிவகங்கை டிச, 1
சிங்கம்புணரி அருகே உள்ள ஏரியூரில் திருமலை மருதீஸ்வரர் திருமண மண்டபத்தில் அரசு சார்பில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடந்தது.
சமூகநலன் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணை ந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகிய துறைகளின் சார்பில் இந்த வளைகாப்பு விழா நடைபெற்றது. ஒன்றிய தலைவர் திவ்யாபிரபு தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.