சிவகங்கை டிச, 9
சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.111.97 கோடியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் -இணை இயக்குநர் சிவராமன், உதவி இயக்குநர் குமார், உதவித் திட்ட இயக்குநர் செல்வி, சிவகங்கை மாவட்ட செயற்பொறியாளர் வெண்ணிலா, தேவ கோட்டை உதவி செயற்பொறியாளர் ஜெயராஜ், கல்லல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ, அழகுமீனாள், உதவிப்பொறியாளர்கள் விஜயலெட்சுமி, கணேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.