நெல்லை டிச, 6
பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி மாநில முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ரயில் நிலையம் விமான நிலையம் போன்ற இடங்களில் 8000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் நெல்லை, கோவை உள்ளிட்ட இடங்களிலும் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க வாகன சோதனையில் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.