திருச்சி டிச, 5
திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 11 மணி அளவில் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான தூறல் மழை பெய்தது. பகல் 11:30 மணிக்கு மேல் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.
மேலும், நேற்று விடுமுறை நாள் என்பதால் மழைக்கு பெரும்பாலானவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இதனால் பல்வேறு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.