விழுப்புரம் டிச, 3
தமிழக அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கி ஓய்வூதியதாரர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து, மாநிலத்திலேயே முதன் முறையாக 1,430 ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டுக்கான அட்டைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியர்களின் நலனை காக்கும்பொருட்டு மாவட்டங்களில் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஓய்வூதியர்களின் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தி அவர்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் என தமிழக முதமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட கருவூலத்தில் 6,357 ஓய்வூதியர்கள், செஞ்சியில் 2,453, திண்டிவனத்தில் 3,579, வானூரில் 998, விழுப்புரம் சார்நிலை கருவூலத்தில் 107 ஓய்வூதியர்கள் என மொத்தம் 13,494 ஓய்வூதியர்கள் தங்களுக்குரிய பலன்களை பெற்று வருகின்றனர். இவர்களில் 1,430 ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத்திட்ட அட்டை தற்போது வழங்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் 2022 ஜூலை 1ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஓய்வூதியம் பெறுபவர்களும் *வாழ்க்கைத்துணை உள்பட* குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களும் கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.