சென்னை டிச 3,
கடற்படை தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளை கடற்படைக்கு சொந்தமான கப்பலில் அழைத்து சென்று கடற்படையின் செயல்பாடுகளை மாணவர்கள் அறிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை இந்திய கடற்படை செய்திருந்தது.
அதன்படி, இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்களில் மாணவர்களை அழைத்து செல்லப்பட்டனர். இந்த பயணத்தின் போது மாணவர்கள் ஆயுதப்படைகளில் சேர ஊக்குவிக்கப்பட்டனர். மாணவர்கள் கூறும்போது இந்த விளக்கமுறை மற்றும் பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்று தெரிவித்தனர் .