கிருஷ்ணகிரி டிச, 2
கிருஷ்ணகிரி நகரின் 5 ரோடு ரவுண்டானா பகுதியில் உயர்கோபுர மின் விளக்கில் சில பல்புகள் செயல்படவில்லை. நகரின் முக்கியமான பகுதியில் உயர்மின் கோபுர விளக்கு பழுதடைந்ததால் இரவு நேரங்களில் வணிகர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி நகராட்சி சார்பில் உயர் கோபுர மின் விளக்கில் பழுதடைந்த பல்புகளை மாற்றி, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இப்பணிகளை நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப் ஆய்வு செய்தார். அப்போது தி.மு.க. நகர செயலாளர் நவாப், கவுன்சிலர்கள் மத்தீன், பாலாஜி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கனல்சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.