சென்னை நவ, 30
அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் டிசம்பர் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மொத்த ரன்னிங் டைம் 1 1/2 மணி நேரம். திகில் கதையில் உருவாகியுள்ள இதில் சத்யராஜ் அனுபவம் கெர், வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.