சென்னை டிச, 1
பிரபல மியூசிக் ஸ்ட்ரீமிங் தளமான ஸ்பாட்டிபை 2022 ம் ஆண்டிற்கான புள்ளிவிபரப்பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழில் முதல் இடத்தை அனிருத் பெற்றுள்ளார். இந்த ஆண்டு அனிருத்தின் பாடல்கள் 3.1 கோடி ரசிகர்களால் 150 கோடிமுறை கேட்கப்பட்டுள்ளது. மேலும் 182 நாடுகளில் இருந்து அவருக்கு ரசிகர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனிருத்தின் காலம் என்று பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.