மயிலாடுதுறை நவ, 30
சீர்காழி நகர தி.மு.க. சார்பில்இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை யொட்டி, நகராட்சி 18-வது வார்டில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திமுக நகர செயலாளர் சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது.
நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி, ஒன்றிய செயலாளர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் முத்து.மகேந்திரன், சாமிநாதன், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலை, இலக்கிய பிரிவு மாவட்ட அமைப்பாளர் செல்வ முத்துக்குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினருமான நிவேதா.முருகன், ஆகியோர் பொதுமக்கள், மாற்றுதிறனாளிகளுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், ராமு, திட்டை ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி, தி.மு.க. நிர்வாகிகள் முத்துகுபேரன், முருகன், செந்தில், கோடங்குடி.சங்கர், மற்றும் பலர் பங்கேற்றனர்.