சீர்காழி நவ, 28
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி, கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்கள் முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது. கனமழையால் பாதிக்கப்ப ட்ட அனைவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி சீர்காழி தரங்கம்பாடி பகுதியில் பொதுமக்களுக்கு ரூபாய் 1000 வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதை கண்டித்தும் கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் அ.தி.மு.க.வின் ஆர்ப்பா டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்தஸஆர்ப்பாட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் பவுன்ராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் பாரதி, ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் சந்திரசே கரன், ரவிச்சந்திரன், நற்குணன், சிவக்குமார், பேரூர் கழக செயலாளர் போகர்ரவி, நகர செயலாளர் வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.