அரியலூர் நவ, 29
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உடையார்பாளையம் வட்டம், கங்கை கொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அந்த பணிகள் குறித்து அதிகாரிகள் முதலமைச்சரிடம் எடுத்துரைத்தனர். அகழ்வாய்வின் போது கிடைத்த பொருட்களையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராசா, தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.