அரியலூர் நவ, 29
அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள ரூ.1 கோடியே 56 லட்சம் மதிப்பிலான 3 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.3 கோடி மதிப்பீட்டில் 51 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் 27 ஆயிரத்து 70 பயனாளிகளுக்கு ரூ.52 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.31 கோடியே 37 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பிலான 54 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.221 கோடியே 80 லட்சத்து 28 ஆயிரம் செலவில் முடிவுற்ற 23 திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தும், பல்வேறு அரசுத்துறைகள் மூலம் 9,621 பயனாளிகளுக்கு ரூ.26.2 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.