தர்மபுரி ஆகஸ்ட், 8
தர்மபுரி மாவட்டத்தில் திமுக சார்பில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கருணாநிதி நினைவு நாள் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4-வது நினைவு நாள் நேற்று தர்மபுரி மாவட்டம் முழுவதும் திமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது. கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கருணாநிதி நினைவு நாளையொட்டி மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகில் இருந்து அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக 4 ரோடு சென்றடைந்தது. அங்கு அண்ணா சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் நாட்டான் மாது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேகர், தாமரைச்செல்வன், நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் தங்கமணி, சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் செய்திகளை உடனே படிக்க.
http://www.vanakambharatham24x7news.in