திருச்சி நவ, 28
திருச்சி திண்டுக்கல் மெயின் ரோடு ராம்ஜிநகரிலிருந்து மலைப்பட்டி புங்கனூர் வழியாக அல்லித்துறை செல்லும் பிரதான சாலை பழுதடைந்துள்ளது.
அந்த சாலையை சீரமைக்க கோரி மணிகண்டம் ஒன்றிய தெற்கு மற்றும் வடக்கு மண்டலம் சார்பில் பாரதி ஜனதா கட்சியினர் மாவட்டத் துணைத் தலைவர் கள்ளிக்குடி ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்டத் தலைவர் ராஜசேகரன், மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா, மாவட்ட பொதுச்செயலாளர் ஒண்டிமுத்து, சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.