திருச்சி நவ, 27
திருச்சி மாவட்ட த.மு.மு.க. கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட ஒருங்கிணைந்த செயல்வீர்கள் கூட்டம் சத்திர பேருந்து நிலையம் அருகில் உள்ள ராசி மஹாலில் நடைபெற்றது.
இச்செயல்வீரர்கள் கூட்டத்திற்கு திருச்சி கிழக்கு மாவட்ட த.மு.மு.க., ம.ம.க. தலைவர் முகமது ராஜா தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவரும் மாமன்ற உறுப்பினருமான பைஸ் முன்னிலை வகித்தார். செயல்வீரர்கள் கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான ப. அப்துல் சமது, த.மு.மு.க. மாநில பொருளாளர் ஷபியுல்லாஹ் கான், ம.ம.க. துணை பொது செயலாளர் தஞ்சை பாதுஷா, த.மு.மு.க. தலைமை கழக பிரதிநிதி வழ. நூர்தீன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
மேலும் எதிர்வரும் டிசம்பர் 6 ம் தேதி பாபர் மசூதி இடிப்பை கண்டித்து திருச்சி புத்தூர் நான்கு ரோட்டில் த.மு.மு.க. சார்பில் வழிபாட்டு உரிமை பாதுகாப்புக்கான மக்கள் திரள் ஆர்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மேற்கு மாவட்ட த.மு.மு.க. செயலாளர் இப்ராஹிம் ஷா நன்றியுரை நிகழ்த்தினார்.
இக்கூட்டத்தில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், துணை மற்றும் அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, வார்டு நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.